2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சபை நடவடிக்கைகளின் போது மொழி பெயர்ப்பு அவசியம்

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வு தமிழ் மொழியில் மாத்திரம் இடம்பெறுவதால் குறித்த சபை அமர்வின் போது  பேசப்படுகின்ற விடயங்களை தன்னால் புரிந்துகொள்ள முடியாமலுள்ளது எனவும், அடுத்த அமர்வின்போது மொழி பெயர்ப்பிற்கான வசதிகளை தவிசாளர் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் பிரதேச சபை உறுப்பினர் தமேரோ குமாரி தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் நேற்று (24) பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கேள்விச் சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நான் சிங்கள மொழி தெரிந்தவராக இருப்பதால், சபை நடவடிக்கைகளின் போது பேசப்படுகின்ற விடயங்களை தன்னால் புரிந்துகொள்ள முடியாமலுள்ளது. எனவே, தயவு செய்து அடுத்த அமர்வில் மொழி பெயர்ப்பிற்கான வசதிகளை தவிசாளர் ஏற்படுத்தி தரவேண்டும்.

அத்துடன் இந்த சபையிலே நியமிக்கப்படுகின்ற குழுக்களில் பெண் உறுப்பினர்களையும் உள்வாங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன் போது தவிசாளர் குறிப்பிட்ட விடயங்களை ஏற்றுக் கொண்டு செயற்படுவதாக அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .