2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சமூகப் பாதுகாப்புக்கே சிவில் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

சமூகங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதே சிவில் பாதுகாப்புக் குழுக்களாகும். இவற்றின் நடவடிக்கைகள் யாவும் மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதேயாகுமென அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எ.எல்.எம்.ஜெமில்  தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய பொதுமக்கள் நடமாடும் சேவை, அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 380 சிவில் பாதுகாப்புக் குழுக்கள் தற்போது இயங்குகின்றன.  குடும்பப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் இக்குழுக்களின் மூலம் தீர்த்துவைக்கப்படுகின்றது' என்றார்.

'மேலும், எங்கு பிரச்சினைகள் இடம்பெறுகின்றன? அப்பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது? பிரச்சினைகள் ஏற்படக் காரணம் என்ன? என்றெல்லாம் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் ஆராய்ந்து பிரச்சினைகளில் சிலவற்றுக்கு உடனத் தீர்வையும் சிலவற்றுக்கு காலந்தாழ்த்தியும் தீர்வை வழங்குகின்றது' எனவும் அவர் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X