Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 13 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இந்த வருடம் எவ்வித அபிவிருத்திப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லையனெக் கூறி வைத்திய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்டனர்.
இருப்பினும், அவசர சிகிச்சைப் பிரிவுச் சேவை நடைபெற்றது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இந்த வருடம் எவ்வித அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளவில்லையென்றும் அபிவிருத்திக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் என்பன பாராமுகமாக இருந்து வருகின்றது.
இவ்வைத்தியசாலையை மாகாண சுகாதார பணிப்பாளரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் வை.எம்.எம். அஸீஸ் தெரிவிக்கையில், 'இந்த வருடம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மத்திய அரசினால் உபகரணங்கள் கொள்வனவுக்கென 51 மில்லியன் ரூபாய் நிதி ஓதுக்கீடு மாகாண சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்பட்டும் இதுவரையும் எதுவும் நடக்கவில்லை. மாகாண சுகாதார அமைச்சு இந்த வைத்தியசாலையின் தாதியர் விடுதி திருத்த வேலைக்கென 5 மில்லியன் ரூபாய்; நிதி ஒதுக்கீடு செய்தும் எதுவும் நடக்கவில்லை. ஊழியர் கொடுப்பனவுகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிப்புரை வழங்கியும் வைத்தியசாலை சமயலறை மற்றும் களஞ்சியசாலை திருத்தத்திற்கான மதிப்பீட்டை செய்தனுப்புமாறு அவர் விடுத்த பணிப்பையும் பிராந்திய பணிப்பாளர் அலுவலகம் நிறைவேற்றவில்லை. மேலும் பல புறக்கணிப்புக்கள் இடம்பெற்று வருவதனால் மாகாண சுகாதார பணிப்பாளரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இவ்வைத்தியசாலையை கொண்டு வரவேண்டும்' எனவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
2 hours ago