Editorial / 2020 ஜூன் 23 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் இச்செய்தி தொடர்பில் தமது கண்டனத்தை தெரிவிப்பதாகவும், சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இச்செயற்பாடானது, தங்களது நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அலுவலக கடமைநேரம் தவிர்ந்த நேரங்களில் தமக்கு அரசியலில் ஈடுபடமுடியுமென அறிந்துள்ள போதிலும் தாம் அவ்வாறு எந்தவோர் அரசியல் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை எனவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், எந்தவோர் வேட்பாளருக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வாக்களிக்குமாறு தமது சங்கத்தை சார்ந்த எந்தவோர் உத்தியோகத்தரும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026