2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சமுர்த்தி விவகாரம்: மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளவர்களும் குறைக்கப்பட்டவர்களும், தங்களது மேன்முறையீடுகளை, எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு, அட்டாளைச்சேனை பதில் பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், இன்று தெரிவித்தார்.

மேன்முறையீடுகளை, பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள சமுர்த்திப் பிரிவில் ஒப்படைக்குமாறும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயம்​ தொடர்பில் அவர் மேலும் விவரித்துக் கூறியதாவது,

“புதிய சமுர்த்தி பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக, தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தால் பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

“இந்தப் புதிய பயனாளிகளின் பெயர்ப் பட்டியல், பொது மக்களின் பார்வைக்காக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகம் மற்றும் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

“வறுமைக்குட்பட்டவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்தது. இக்கொடுப்பனவுகள், எவ்வித அறிவித்தலும் இல்லாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார்கள்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .