2025 மே 05, திங்கட்கிழமை

சம்சுதீன் நியாஸூக்கு பதவி உயர்வு

Princiya Dixci   / 2021 ஜூலை 01 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் நாயகமாக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த நிலையில், இந்தப் பதவி உயர்வு அவருக்குக் கிடைத்துள்ளது.

1984ஆம் ஆண்டு சுங்க அதிகாரியாக இணைந்து கொண்ட இவர், அதன் பின்னர் பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்று தற்போதைய நிலையை அடைந்துள்ளார்.

சட்ட முதுமாணியான நியாஸ், CASE LAWS OF CUSTOMS எனும் நூலையும் எழுதியுள்ளார்.

இவர், தனது பாடசாலைக் கல்வியை, அட்டாளைச்சேனை அல் முனீரா வித்தியாலயம் மற்றும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுரி ஆகியவற்றில் கற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X