Editorial / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா
நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ள கல்முனை மற்றும் சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதான நெடுஞ்சாலை முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டம், சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில், பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் அவர் கூறியதாவது,
“இவ்வேலைத்திட்டத்துக்கான திட்டமிடல் மற்றும் மதிப்பீடு, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு, அது முடிவுறும் நிலையை அடைந்துள்ளது. இத்திட்டத்துக்கு எதிராக, எவ்வாறான சவால்கள் வந்தாலும், அவற்றை எதிர்கொண்டு, விட்டுக்கொடுப்புக்களைச் செய்து முன்னெடுக்கவுள்ளோம்.
“மேலும், சம்மாந்துறையில் நவீன பஸ் தரிப்பிடம் அமைத்தல், புதிய பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதி அமைத்தல், நகர மண்டபத்தை அபிவிருத்தி செய்தல் போன்ற திட்டங்களுக்காக, சம்மாந்துறை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பிரதான காரியாலயம் அமைந்துள்ள காணியை, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைவாக, நகர அபிவிருத்தி அதிகாரசபையானது, தனதாக்கிக் கொள்வதற்காக விரைவான நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026