2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சர்வோதயபுரத்துக்கு புதிய மைதானம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஜூலை 18 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அம்பாறை, பொத்துவில் - ஆத்திமுனை சர்வோதயபுரத்தில், புதிதாக பொது விளையாட்டு மைதானமொன்று அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என, பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம்.மர்சூக், நேற்றுத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸினால், வனவளப் பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை, விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு வழங்குவதாக, பணிப்பாளர் நாயகம் உறுதியளித்தார்” என்றும், அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .