2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சஹ்ரானுடன் தொடர்பு; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2020 நவம்பர் 02 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

ஏப்ரல் 21 தக்குதல் தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 12  சந்தேகநபர்களை, இம்மாதம் 16ஆம்  திகதி வரை  மீண்டும்  விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு, கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இரு வேறு சந்தர்ப்பங்களில்  இன்று (02) விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது,  காணொளி ஊடாக  சந்தேகநபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து 12 சந்தேகநபர்களையும் இம்மாதம் 16ஆம்  திகதி வரை  மீண்டும்  விளக்கமறியலில்  வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .