2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சாட்சியை அச்சுறுத்தியவர்களுக்கு மறியல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சவளக்கடை பிரதேசத்தில் மாடு திருடிய சம்பவம் தொடர்பாக சாட்சியை அச்சுறுத்திய மூவரை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், நேற்று (23) உத்தரவிட்டர்.

2015ஆம் ஆண்டு, சவளக்கடை பிரதேசத்திலிருந்து, பொத்தவில் பிரதேசத்துக்கு 15 மாடுகளைத் திருடிக்கொண்டு சென்ற 8 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வழக்குத் தொடர்பாக சாட்சி சொல்வதற்கு நீதிமன்றம் சென்றால் உன்னைப் பார்த்துக் கொள்வோமென அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சாட்சி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கு விசாரணையின் போதே,  நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .