2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சான்றிதழ்கள் வழங்கும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2017 ஜூலை 10 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 2017-2018 கல்வியாண்டில் இரண்டு வருடகால ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்தி செய்து, இறுதிப் பரீட்சையில் சித்தி பெற்ற  ஆசிரியர்களுக்கு மூலச் சான்றிதழ்கள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என, அக்கலாசாலையின் அதிபர் ஏ.சீ.எம்.சுபைர் தெரிவித்தார்.

பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட பொதுப் பரீட்சையில் சித்தி பெற்ற 166 பேருக்கு மூலச் சான்றிதழ்கள் வழங்கும் நடவடிக்கை நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

எனவே, வார நாட்களில் அலுவலக வேளையில் கலாசாலைக்கு சமூகமளித்து மூலச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தூரப் பிரதேசங்களிலிருந்து வரும் ஆசிரியர்கள் 0672277234 என்ற இலக்கத்துடனோ அல்லது கலாசாலை அதிபரின் 0718097877  என்ற இலக்கத்துடனோ தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற முடியும் எனவும் அவர் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .