Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 25 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது நகரில் அமைந்துள்ள மருந்தகமொன்றின் களஞ்சியசாலையில் திங்கட்கிழமை (24) இரவு தீடிரெனத் தீ பரவியமையால், அக்களஞ்சியசாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது என, பொலிஸார் தெரிவித்தனர்.
மூடப்பட்டிருந்த இக்களஞ்சியசாலையில் தீ பரவியமையைத் தொடர்ந்து, கல்முனை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இருந்த போதிலும், இன்று அதிகாலை இரண்டு மணியளவிலேயே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்துக் காரணமாக சுமார் இரண்டு கோடி ரூபாய் நட்டம் ஏற்படுள்ளது என, அம்மருந்தகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மருந்தகங்களுக்கும் மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் நிலையமாக இக்களஞ்சியசாலை செயற்பட்டு வருகின்றது.
களஞ்சியசாலையிலிருந்த மருந்துப் பொருட்களும் தளபாடங்களும் தீக்கிரையாகியுள்ளன எனத் தெரிவித்த பொலிஸார், மின்னொழுக்குக் காரணமாகவே தீ பரவியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago