2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சாய்ந்தமருதுக்கு 50 வீடுகள்

Editorial   / 2017 ஜூலை 03 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில், வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட  50 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு, கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான  ரிஷாட் பதியுதீன், இணக்கம் தெரிவித்துள்ளதாக, அக்கட்சியின் தலைவரும் அரச வர்த்தகக் கூட்டுத்தானத்தின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

மேற்படி மக்களுக்கு, வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்து, அமைச்சரினால் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

'சாய்ந்தமருது பிரதேசத்தில் காணப்படும் வறிய குடும்பங்களுக்காக, 100 வீடுகளை நிர்மாணித்துத் தருமாறு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாயல் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாகவே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் வீடுகளை அமைப்பதற்கான இடம் மற்றும் தகுதியானவர்களின் பெயர் விவரங்களைஉடனடியாக வழங்குமாறு அமைச்சர் கோரியுள்ளார்' என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .