Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2022 ஜனவரி 11 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சிகிரியா மலையை தங்கமாக மாற்றினால் தான் எதிர்காலத்தில் நாட்டின் தலைவராகவோ அல்லது உச்ச அதிகாரம் படைத்தவராகவோ வர முடியும்” என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக, கல்முனையில் இன்று (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில், “நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில்கொண்டு அரசாங்கம் செயலாற்றுகின்றமையை சஜித் உணர வேண்டும். இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகவே நாங்கள் பார்க்கின்றோம். இன்னும் 20 வருடங்களுக்கு இந்த அரசாங்கம் நிலைத்து நிற்கும்.
“நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமையைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களை தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர்.
“உண்மையில் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும்கூட வீட்டுக்கு ஒரு பட்டதாரி நியமனம் என்ற அடிப்படையில் ஏறத்தாழ 51 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்திர நியமனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
“அதேபோன்று, பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றது. எனவே, மக்கள் அவதானமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
06 Jul 2025