2025 மே 02, வெள்ளிக்கிழமை

சிகை அலங்கார நிலையங்களை திறப்பதற்கு மருத்துவ சான்றிதழ் அவசியம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களில் பணி புரிகின்றவர்கள் சுகாதார வைத்தியதிகாரிகளிடம் மருத்துவ சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டுமென, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எஸ். அகிலன் தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் கடந்த 25 நாட்களாக ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, மூடப்பட்டிருந்த சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களை திறப்பதற்கு பல கட்டுப்பாடுகளுடன், அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அழகுக் கலை மற்றும் சிகை அலங்கார நிலையங்களில் பணிபுரிபவர்கள் ஒவ்வொருவரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சுகாதார வைத்தியதிகாரியிடம் மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

பணியாளர்கள் கையுறை மற்றும் முகக்கவசம் என்பன அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் அழகுக் கலை மற்றும் சிகை அலங்கார நிலையங்களுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வருதல் வேண்டும். கைகளுவுவதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X