Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2017 ஜூலை 03 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர், எம்.எல்.எஸ்.டீன்
தனது வாழ்நாளை ஊடகத்துறைக்காக அர்ப்பணித்த இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களுள் ஒருவரான நிந்தவூரைச் சேர்ந்த கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம், முழுநேர ஊடகவியலாளராக ஐம்பது வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளமையைக் கௌரவித்து, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தால், 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கௌரவிக்கவுள்ளது.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் எதிர்வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு, நிந்தவூர் பிரதேசசபை மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதன்போது, சலீம் பற்றிய தகவல்களோடு ஊடகத்துறை மற்றும் அரசியல்துறை சார்ந்தவர்களின் வாழ்த்துச் செய்திகள் அடங்கிய 'பொன் விழா காணும் ஏ.எல்.எம்.சலீம்' என்ற பெயரில், நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.
மேலும், ஊடவியலாளர் சலீம் அவர்களின் ஊடக சேவைக்காக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் அணிவித்து, வாழ்த்துப் பேழை, சான்றிதழ், பரிசுப்பொதி என்பன வழங்கப்படவுள்ளதுடன் பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்படவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago