Suganthini Ratnam / 2017 ஜூலை 12 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
'புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதில் ஒரு சில தடைகள் ஏற்படுகின்றபோதும், சிறுபான்மையின மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட இந்த நல்லாட்சி அரசாங்கம், அதனை நிறைவேற்றும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
சம்மாந்துறை, மலையடிக் கிராமிய மகளிர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு சிறுபான்மையின மக்களும் பெரும்பான்மையின மக்களும் ஜனநாயக ரீதியாக தங்களது ஆணையை வழங்கியுள்ளார்கள்.
'அந்த மக்கள எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் பின் நிற்கக்கூடாது. குறிப்பாக, புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் தமது ஆணையை வழங்கியுள்ளார்கள்' என்றார்.
'பெரும்பான்மையினச் சமூகத்திலுள்ள ஒரு சில அமைப்புகள் இதனை எதிர்த்து, இடர்பாடுகளை ஏற்படுத்திவரும் இக்காலகட்டத்தில், ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து சிறுபான்மையின மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பு இந்ந நல்லாட்சி அரசாங்கத்துக்கு உண்டு.
'ஆகவே, புதிய அரசமைப்பை ஏற்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து ஒத்தாசைகளையும் இந்த அரசங்கத்துக்கு வழங்கி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதுணையாக இருந்து செயற்படும்.
மு.காவானது, இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி என்ற வகையில், இந்தக் கட்சி புதிய அரசமைப்பை ஏற்படுத்துவதற்கு மிகவும் உறுதுணையாகவும் நல்லாட்சிக்கு ஆதரவாகவும் இருக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
புதிய அரசமைப்பில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதில் கரிசனையுடன் மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மும்முரமாக செயற்படுகின்றார்' என்றார்.
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026