Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூன் 06 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடாத விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அதன் உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச விவசாயக் குழுக் கூட்டம், பிரதேச செயலக்தில் இன்று நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
வரட்சியால் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறை காரணமாக அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்து 500 ஏக்கரில் இம்முறை சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான அனுமதி அம்பாறைப் பிராந்திய நீர்பாசனத் திணைக்களத்தால் வழங்கப்படவில்லை.
இவ்வாறு சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளாத விவசாயிகள் 2 ஆயிரத்து 600 பேருக்கு நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
மேலும், அட்டாளைச்சேனையில் செய்கை பண்ணப்படாமலுள்ள விவசாயக் காணிகள், விவசாய செய்கைக்கு உகந்ததாக மாற்றி அமைப்பதற்குரிய நடவடிக்கை விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அட்டாளைச்சேனையில் காணப்படும் நெற்செய்கைக் காணிகளுக்கு மண் போட்டு நிரப்புவது சட்டவிரோதமான செயற்பாடாகும். இவ்வாறான செயலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் விவசாயிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
19 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago