2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சிறுவர் நன்னடத்தை; கல்முனையில் காரியாலயம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்

கிழக்கு மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட 10 மில்லியன் 65 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கல்முனை சிறுவர் நன்னடத்தை காரியலயன் கட்டிடத்திறப்பு விழா, சிறுவர் நன்னடத்தை கல்முனை காரியாலயப் பொறுப்பதிகாரி டீ. மதியழகன் தலைமையில், இன்று (10) காலை நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். அத்துடன், திறப்புவிழா நினைவாக அதிதிகளினால் மரக்கன்றுகளும் இங்கு நடப்பட்டன.

நிகழ்வில், அம்பாறை மாவட்ட கட்டிடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாக்கீர், கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திருமதி றிஸ்வினி றிபாஸ், கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள உதவி ஆணையாளர் எஸ். சரண்யா, கல்முனை பிராந்திய சிரேஷ்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ். சிவகுமார், கல்முனை பிராந்திய சிறுவர் நன்னடத்தை காரியாலய அதிகாரிகள் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .