2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சிறுவர் பூங்காவை அழகுபடுத்தும் சிரமதானம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுனாமி அனர்த்தத்தால் அழிவடைந்த மருதமுனை மஷூர் மௌலானா வீட்டுத்திட்டப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை அழகுபடுத்தும் பொருட்டு, முதல்வர் ஏ.எம்.றகீப்பின் நேரடிக் கண்காணிப்பில் நேற்று (17)  சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாநகர சபையின் பெக்கோ இயந்திரம் மற்றும் வாகனங்களுடன் ஊழியர்கள் பலர் இப்பூங்கா பகுதியிலுள்ள கட்டிட இடிபாடுகள் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
 
முழுநாள் இடம்பெற்ற இச்சிரமதான நடவடிக்கைகளை சுமார் மூன்று மணித்தியாலங்கள் களத்தில் நின்று நெறிப்படுத்திய முதல்வர், இப்பூங்காவுக்கு எல்லையிடுதல், உள்ளக வீதிகள் அமைத்தல், அழகுபடுத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தினார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் சுமார் 83 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், இச்சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X