2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிவப்பு அறிவித்தலை மீறியவர்களுக்கு வழக்கு தாக்கல்

Freelancer   / 2022 ஜூன் 29 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்து துப்பரவு செய்யுமாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தும், அதனை மீறியபவர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ. காதர் இன்று  (29) தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸின் ஆலோசனைக்கமைய பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட டெங்கொழிப்பு செயலணியினர் இணைந்து வீடு வீடாகச் சென்று டெங்கொழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, டெங்கொழிப்பு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

டெங்கொழிப்பு பரிசோதனையின் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்து துப்பரவு செய்யுமாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தும், அதனை மீறியபவர்க்கெதிராகவே வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுற்றுப்புறத்தில் தேங்கும் நீர் நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப்படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்கின்றது.

பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்புரவாக தமது இடங்களை வைத்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

தென்னம் குரும்பை, யோகட் கப், வெற்று போத்தல்கள், வெற்று டயர்கள், பொலிதீன் கழிவுகள் போன்ற கழிவுகளை முறையாக அகற்ற வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

பொதுமக்கள் வாரத்தில் ஒரு நாள் தங்களது வீடுகளையும் சுற்றுப்புறச் சுழலையும் துப்பரவு செய்ய வேண்டுமெனவும், டெங்கொழிப்பு தொடர்பான ஆலோசனைகள் தேவைப்படும் பட்சத்தில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாமென அறிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X