Princiya Dixci / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாணத்தில், பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து, தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் முகக்கவசம் அணிந்து, சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ. லதாகரன் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பஸ்களில் பயணிக்கும் பயணிகள் சமூக இடைவெளியைப் பேணி, முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டுமெனவும், மீறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகவும் பஸ்களின் சாரதிகள், நடத்துநர்களு க்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், கூறினார்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற பஸ்களை பரிசோதிப்பதற்கு பொலிஸார், இராணுவம் மற்றும் சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்ல வேண்டாமெனவும், சன நெரிசலான இடங்களில் சுகாதார நடைமுறைகள், சமூக இடைவெளியை பேணுமாறும், இதனை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும், தெரிவித்தார்.
முகக்கவசம் அணியாமல் செல்பவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸாரும், சுகாதார அதிகாரிகளும் நகரங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் டொக்டர் ஏ.லதாகரன் மேலும் தெரிவித்தார்.
8 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
22 Jan 2026