Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் இளைஞர்கள், அமைதியைப் பேணி வீடுகளுக்குள் இருந்து அரசின் சட்ட விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பாதுகாப்புத் தரப்பினருடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளா வேண்டாமென்றும் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (07) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
"சட்டத்தை மதித்து ஒழுக்கமுள்ள பிரஜைகளாக வாழ்வதற்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும். எமது நாட்டில் நாளுக்கு நாள் வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்றது. எமது பிரதேசத்தில் இது வராமல் இருப்பதற்கு நாம் மிகவும் கவனமாக கையாள வேண்டிய சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
“இன்று சுகாதாரத்துறையினர், பொலிஸ், முப்படையினரும் எமது நாட்டை பாதுகாக்கின்ற விடயத்தில் முழுமையாக தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தியுள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது எங்களுடைய தார்மீகக் கடமையாகும்.
“கடந்த சில நாள்களாக பொலிஸாரின் ரோந்து நடவடிக்கையின்போது, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை போன்ற பிரதேசங்களில் அவசியம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த பல இளைஞர்கள் கைதாகி இருப்பதாக அறிய முடிகின்றது.
“எனவே, இவ்வாறான நெருக்கடி நிறைந்த காலகட்டத்தில் பொறுப்புகளை உணர்ந்து மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் அதேபோன்று வெளி ஊர்களுக்கு அவசியம் கருதி செல்பவர்கள் தங்களை உரிய முறைப்படி பதிவு செய்து கொண்டு சுகாதார விதிமுறைகளை பேணி நடந்து கொள்ளுமாறும் வேண்டிக்கொள்கின்றோம்" என்று அந்த அறிக்கையில் மயோன் முஸ்தபா கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
22 minute ago
2 hours ago