Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
2014.12.26 இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால், அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் தனது மகனை இழந்த அபுசாலி சித்தி ஹமாலியா என்ற பெண், 16 வருடங்களுக்கு பின்னர் மகனைக் கண்டுபிடித்துள்ளார்.
சுனாமி அனர்த்தத்தில் 05 வயதில் காணாமல் போன றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் (வயது 21) எனும் இளைஞனே 16 வருடங்களின் பின்னர் இவ்வாறு தனது தாயாருடன் இணைந்துள்ளார்.
சுனாமி அனர்த்தத்தின் போது சிற்றூழியராக வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்ததாகவும் வீடு சென்று பார்த்த போது தனது மகனைக் காணாது கதறியதாக, அபுசாலி சித்தி ஹமாலியா தெரிவித்தார்.
எனினும், பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இன்று தனது மகன் தன்னுடன் இணைந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
தனது விடா முயற்சியால், அம்பாறை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளில், மகனின் சிறுபாராய புகைப்படத்துடன் மகனைத் தேடி அலைந்தமையால் மகன் படிக்கும் பாடசாலையைக் கண்டறிந்ததாகவும் சிங்களப் பாடசாலையொன்றில், நான் பெயரிட்ட அதே பெயருடன் மகன் கல்வி கற்றுக்கொண்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று விரும்பி என்னுடன் வந்து இணைந்துள்ள எனது மகனை வளர்த்தவர்கள் எப்போதும் எந்த நேரமும் மகனை சந்திப்பதற்கு வருகை தந்தாலும் நான் ஆட்சேபனை செய்யப் போவதில்லை எனவும் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
39 minute ago
40 minute ago