Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூலை 09 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
கல்முனையை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தாமல் தடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கூறுவது போன்று கல்முனை அவருடைய வீட்டு சொத்தல்ல. தமிழர்களது பூர்வீக அடையாளமாக இருக்கிறதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் என்றும் அதனை அழித்து அவர்களுடைய தேவைக்கேற்ப சுரண்டுவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்து நேற்று ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட விஷேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.முஸ்லிம் தரப்பினர் கேட்கின்ற நியாயமான எல்லையை பரிசீலிக்கலாம்.ஆனால் தமிழ் சமூகத்தின் ஆள்புல எல்லைகள் மிகவும் துல்லியமாக வரையறுக்கப்பட்டாக வேண்டும். அவ்வாறு நடைபெறாமல் அரசை பயம்காட்டி நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து காரியம் சாதிக்க நினைப்பது நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் மடமைத்தனமாகும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் சேலையின் ஊசி மருந்தால்தான் இந்த அரசாங்கம் இன்னும் பயணிக்கிறது. நாம் சேலையின் பாச்சாவிட்டால் ரணில் அரசு நடுவீதியில் இந்த அரசாங்கம் வரும் என்பதை சகலரும் உணர வேண்டும் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.இதேவேளை பிரதமர் ரணிலுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு 08.07.2019 அன்று நடத்திய சந்திப்பில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்காக தனியான கணக்காளர் தனியான வங்கிக்கணக்கு திறப்பதற்கான நடவடிக்கை உடனடியாக இடம்பெறும் என பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
7 hours ago