Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஜூலை 06 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆலிம் நகர், இசங்கனிச்சீமை மற்றும் பள்ளிக்குடியிருப்பு 02ஆம் பிரிவு ஆகிய பிரிவுகள் "செளபாக்கியா உற்பத்திக் கிராமங்களாக" தெரிவு செய்யப்பட்டு, அங்கு அபிவிருத்தி திட்டங்கள், நேற்று (05) அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான் தலைமையில் ஆலிம் நகரில் நடைபெற்றது.
குறித்த திட்டத்துக்காக தெரிவுசெய்யப்பட்ட 3 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் முதல் கட்டமாக தெரிவான பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டதுடன், ஆடு வளர்பு தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது. இது மக்கள் பங்களிப்புடனான ஒரு வேலைத்திட்டமாகும்.
சௌபாக்கிய திட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், சமுர்த்திப் பயணாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் கடன் வழங்கல், பாடசாலை மாணவர்களுக்கு சிப்தொர புலமைப்பரிசில் வழங்குதல் போன்ற திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான் தெரிவித்தார்.
சமுர்த்தி திணைக்களத்தினால் சமுர்த்தி பயணாளிகளுக்கு வீடுகள் நிர்மாணித்தல், சேதனைப் பசளை உற்பத்தி, மின்சார வசதியற்றவர்களுக்கு மின்சாரம் வழங்கல் உள்ளிட்ட வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சமுர்த்தி பயணாளிகளின் நன்மை கருதி பல்வகையான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதையொட்டி சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஜுலை 01ஆம் திகதி தொடக்கம் 07ஆம் திகதி வரை சௌபாக்கிய சமுர்த்தி வாரம் நாடுமுழுவதிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
17 minute ago
43 minute ago
49 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
43 minute ago
49 minute ago
5 hours ago