2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சேவை பாராட்டு விழா

பைஷல் இஸ்மாயில்   / 2018 ஜனவரி 15 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக பாரம்பரிய வைத்திய சேவையை வழங்கிய வைத்தியர் ஈ.வைரமுத்துவைப் பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு, வைத்திய பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு, எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை மதியம் 12 மணியளவில் குறித்த வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக, வைத்தியப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதன்போது, அவரின் கடந்தகால சேவைகளை ஞாபகமூட்டி, பாராட்டிக் கெளரவித்து, பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னமும் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .