2025 மே 05, திங்கட்கிழமை

சோளம் செய்கையில் மீண்டும் ’சேனா’ தாக்கம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 26 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீகே.றஹ்மத்துல்லா   

அம்பாறை மாவட்டத்தின் சோளம் பயிர்ச் செய்கையில் பாரியளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் 'சேனா'படைப்புழுக்களின் தாக்கத்தின் அபாயம் மீண்டும் காணப்படுவதை அடுத்து, விவசாய திணைக்களம் அது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளையும் ஆலோசனைகளையும் விவசாயிகள் மத்தியில் வழங்கி வருகின்றது.

'சேனா' படைப்புழுவின் தாக்கம் நாட்டுக்குப் பரிய சவாலாக அமைந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை விவசாய அமைச்சர், விவசாய திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதுடன், சோளத்தில் படைப்பு ஏற்படுவதற்கான காலநிலை தற்போது சாதகமா உள்ளதால், இதன் அபாயம் குறித்து விவிசாயிகள் அதீத கவனம் செலுத்த வேண்டும் எனவும்  விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவில் பிரதான விழிப்புணர்வு நிகழ்வு, அட்டாளைச்சேனை பிரதேச விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்டது. 

பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீரின் வழிகாட்டலில், 'நிரந்தர பயிர்ச் சிகிச்சைத் திட்டம்' எனும் செயற்றிட்டத்துக்கு அமைய, பிரதேச விவசாய விரிவாக்கல் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எச்.ஏ. முபாறக் தலைமையில் இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X