Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தானால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிறாஜ் மசூர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, இன்று செவ்வாய்க்கிழமை (07) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,
திறமையான தலைமைத்துவத்தின் கீழ் வைத்தியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொலிஸார், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏனையோர் சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உலக சுகாதார நிறுவனம் மெச்சும் அளவுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளன என்பது பாராட்டக் கூடிய ஒன்றாகும் என்றும் அத்தோடு பல அபாயங்களுக்கு முகங்கொடுத்து முன்னணியில் நின்று அத்தியாவசிய சுகாதாரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தாம் நன்றிக் கடன் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், முன்னணியில் இயங்கி வரும் சுகாதாரத் துறைப் பணியாளர்கள் மட்டுமல்லாது, பெருந்தொகையான வேறு பலரும் நம் சமூக இயக்கத்தை சீராக நடத்துவதற்கு பெரிதும் பங்களித்து வருகின்றனர் என்றார்.
'உலகளாவிய நோய்ப் பரவலுக்கு எதிரான இந்தப் போராட்டத்துக்கு அனைத்துப் பிரஜைகளும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதை நாங்களும் மீள மீள வலியுறுத்துகிறோம். அதேவேளை, ஒவ்வொருவரினதும் சமய மற்றும் பண்பாட்டு உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுச் சுகாதாரத்துக்கு ஆபத்தாக அமையாது எனில், எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இவ்வுரிமைகளைப் பாதுகாப்பது அவசியமாகும்' என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
39 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
47 minute ago
2 hours ago