Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2019 ஜனவரி 29 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தேசிய தினம் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமாதான பேரவையின் முன்னாள் தலைவர் எஸ்.எல்.எம் ஹனீபா மதனி, மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், தேசிய தினக் கொண்டாட்டத்துக்கு முன்னர், நாட்டின் பௌத்த துறவிகளில் ஒருவரான கலகொட அத்தே ஞானசார தேரரை, பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கோரியுள்ளார்.
இது தொடர்பில், பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும் விண்ணப்பங்களும், கோரிக்கைகளும் ஜனாதிபதிக்கு வந்த வண்ணம் இருக்கின்றனவென சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் முஸ்லிம் சமூகம் கொண்டுள்ள விருப்பத்தையும் தங்களிடம் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஞானசார தேரரை விடுதலை செய்வதன் மூலம், முஸ்லிம் சமூகமும் ஏனைய சமூகங்களுடன் இணைத்து மகிழ்ச்சியடையும் என்பதை உறுதிபடத் தெரிவிப்பதாக, அவர் கூறியுள்ளார்.
தங்களின் பொதுமன்னிப்பால் மாத்திரமே தேரர் விடுதலையாகும் வாய்ப்பு உள்ளதாகவும் இதன்மூலம் பௌத்த மக்களின் கௌரவத்துக்கும் பேரன்புக்கும் பாத்திரமாகி விடுவீர்கள் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல வருடங்களாக சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்து, இவ்வருட தேசிய தினத்தில் அவர்களது குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ ஆவன செய்யுமாறும் ஹனீபா மதனி கோரியுள்ளார்.
இதேவேளை, சுனாமியின் போது அக்கரைப்பற்று கடற்கரையோரங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் உயிர்கள், சொத்துகள், வீடுகள் இழக்கப்பட்டனவெனவும் பாதிக்கப்பட் அம்முஸ்லிம் மக்களுக்காக அக்கரைப்பற்று பிரதேச சபையின் கீழுள்ள நுரைச்சோலைப் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட 500 வீடுகள் இதுவரை வழங்கப்படாமல் உள்ளனவென்றும், அவர் தெரிவித்தார்.
சவூதி அரேபியா நாட்டின் நிதியினூடாக முஸ்லிம்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட இவ்விடுகள், பயனாளிகளுக்குக் கிடைப்பதற்குரிய ஆணையொன்றை வழங்குமாறு, ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago