2025 மே 15, வியாழக்கிழமை

ஜப்பான் நாட்டு தூதுவர் விஜயம்

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் சுஜியாமா அக்கீரா, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்துக்கு, நல்லெண்ண விஜயமொன்றை, இன்று (28) மேற்கொண்டு, நூலகத்துக்கு நூற் தொகுதியைக் கையளித்தார்.

நிப்பொன் பவுண்டேஷன் அமைப்பால் 'சமகால ஜப்பானை அறிந்து கொள்ள நூறு ஜப்பானிய புத்தகங்களை வாசியுங்கள்' எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீமிடம் ஒரு தொகுதி புத்தகங்களை தூதுவர் சுஜியாமா அக்கீரா கையளித்தார்.

இந்த நூற் தொகுதியில் அரசியல், சர்வதேச உறவுகள், வர்த்தகம், பொருளாதாரம், இலக்கியம், கலை மற்றும் சரித்திரம் தொடர்பான புத்தகங்கள் அடங்கியுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

இந் நூற் தொகுதியானது பல்கலைக்கழக நூலகத்தினது நூற்சேற்கையானது மேலும் சிறப்படைவதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் ஜப்பான் நாடு தொடர்பான சிறந்த நல்லெண்ண புரிந்துணர்வை இலங்கைக்கும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் ஏற்படுத்துமெனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுடீன், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .