எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 மார்ச் 27 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெங்கு நுளம்பு பரவக் கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவருக்கு எதிராக, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில், நாளை (28) வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலைய சுற்று சூழல் பாதுகாப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் இனஸ்பெக்டர் எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்தார்.
அம்பாறை, சம்மாந்துறை சுகாதார வைத்தியிதகாரி பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை மற்றும் மாவடிப்பள்ளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மேற்படி இருவர் மீது, வீட்டுக் கழிவு நீரை வாடிகானுக்குள் அகற்றி சுகாதாரத்துக்கு பங்கம் விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வீட்டு கழிவு நீரை மிகவும் சூசியமான முறையில் வடிகானுக்குள் அகற்றியதால் அப்பிரதேசத்தில் துர்நாற்றம் விசி வருவதாகவும், டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்கள் காணப்படுவதாகவும் பொதுமக்களால் சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட நபர்களுக்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பலமுறை அறிவுறுத்தல் விடுத்தும் இதனை உதாசீனப்படுத்தி வந்துள்ளார்கள்.
இதையடுத்து, பொலிஸார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து, நேற்று (26) மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, இவர்களது குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
21 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago