Freelancer / 2022 ஜூன் 22 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் அதிகமான டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டதையடுத்து, டெங்கு நுளம்பு பெருகுவதை தடுக்க புகை விசுறும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (21) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில், இரு வார காலத்திற்குள் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸின் ஆலோசனைக்கமைய அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக ஒருங்கிணைந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பாடசாலைகள், அரச, தனியார் நிறுவனங்கள், மதஸ்தாபனங்கள் உட்பட டெங்கு பரவும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் புகை விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கிணறுகளில் டெங்கு நுளம்பின் குடம்பிகள் உருவாகாமல் தடுப்பதற்கு மருந்துகள் இடப்பட்டு வருவதாகவும், குடிநீர் கிணறுகளில் டெங்கு நுளம்பை அழிக்கும் பொருட்டு மீன் குஞ்சிகள் இடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு பரவக் கூடிய வகையில் பராமரிப்பின்றி இடங்களை வைத்திருப்பவர்களுக்கெதிராக நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்படுமெனவும் சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எம். இஸ்மாயில் மேலும் தெரிவித்தார்.

31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026