Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 24 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.எம்.எம்.காதர்
டெங்குக் காய்ச்சல் காரணமாக, கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மருதமுனையைச் சேர்ந்த எம்.ஏ.சி.ஆயிஷா (வயது 12) என்ற மாணவி, சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு உயிரிழந்துள்ளாரென, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில், தரம் 07இல் கல்விக் கற்று வந்த மாணவியே, இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேற்படி மாணவி, கடந்த 04ஆம் திகதி காய்ச்சல் காரணமாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் இவருக்கு டெங்குக் காய்ச்சல் நோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பின்னர் மேற்படி மாணவி, 8ஆம் திகதி அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்து கடந்த 21 ஆம் திகதி, கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே, அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம்மாணவி மருதமுனையைச் சேர்ந்த ஆசிரியர்களான எம்.ஐ.எம்.அப்துல் காதர், ஹம்சத் றம்சின் தம்பதியின் புதல்வியாவார்.
மருதமுனைப் பிரதேசத்தில் உள்ள வடிகான்களில் நீர்தேங்கி நிற்பதால் சுகாததாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை பாடசாலைகளின் வகுப்பறைகள் மற்றும் மலசலகூடப்பிரதேசங்களும் அவதானிக்கப்படவேண்டும் என அறிவறுத்தப்பட்டுள்ளது.
18 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
31 minute ago