2025 மே 05, திங்கட்கிழமை

’டெங்கொழிப்பை தீவிரப்படுத்தங்கள்’

Princiya Dixci   / 2020 நவம்பர் 19 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

2020ஆம் ஆண்டு மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக இம்மாதம் 23ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கொழிப்புப் பணிகளை முன்னெடுக்குமாறு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன், இன்று (19) தெரிவித்தார். 

மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகம் ஆகியோர் ஒன்றினைந்து, பாடசாலை மற்றும் பாடசாலையை அண்டிய சுற்றுச்சூழலை துப்புரவு செய்யுமாறும் அவர் அறிவித்துள்ளார்.

கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் ஆகிய வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கொழிப்பு துப்புரவுப் பணியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துமாறும், டெங்கு அபாயமற்ற சூழலை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், பாடசாலை அதிபர்களைக் கேட்டுள்ளார்.

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் இந்த டெங்கொழிப்புப் பணிகளைக் கண்கானிக்குமாறு, பிரதேச சுகாதார வைத்தியதிகாரிகளைப் பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

பாடசாலைகள் கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக மூடப்பட்டுள்ள நிலையில், பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதையடுத்து, கல்முனைப் பிராந்தியத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகாரித்துக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X