2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தாக்குதல் குற்றச்சாட்டில் கைதான நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

போதைப்பொருள் குற்றத்தடுப்பு விசேட பொலிஸாரைத் தாக்கிய மற்றும் அவர்களின்; வாகனத்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 20ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இச்சந்தேக நபர்களை நேற்று (6) மீண்டும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, இவர்களுக்கான விளக்கமறியலை நீதவான் நீடித்துள்ளார்.

சம்மாந்துறையிலுள்ள வீடு ஒன்றில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக கடந்த ஜுலை  17ஆம் திகதி அம்பாறை போதைப்பொருள் குற்றத்தடுப்புப்  பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார் மீது இச்சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தியதுடன், அவர்கள் வாகனத்தைச் சேதப்படுத்தியும் உள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .