Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருதிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தை திருகோணமலைக்கு இடமாற்றுவதை உடனடியாகத் தடுக்குமாறு தென்கிழக்கு கல்விப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைஷால் காசீம் ஆகியோருக்கு இது தொடர்பான கடிதத்தை தென்கிழக்கு கல்விப் பேரவை இன்று (20) அனுப்பியது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,'2011ஆம் ஆண்டு சாய்ந்தமருதில் திறந்துவைக்கப்பட்ட இந்த அலுவலகத்தின் ஊடாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான இளைஞர் அபிவிருத்திப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த வருடம் இந்த அலுவலகத்தை அம்பாறை நகருக்கு இடமாற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டபோதும், முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் தலையிட்டு, நடவடிக்கை எடுத்ததன் பயனாக அது கைவிடப்பட்டது.
எனினும், 2017ஆம் ஆண்டுக்கான தேசிய யொவுன்புர நிகழ்வை திருகோணமலையில்; நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வைக் காரணம் காட்டி இந்த அலுவலகத்தை திருகோணமலை நகருக்கு இடமாற்றுவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை நிர்வாகத்தால் முயற்சி எடுக்கப்படுவதாகத் தெரியவருகின்றது.
எனவே, இந்த அலுவலகத்தை இடமாற்றுவதை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
3 hours ago
3 hours ago