2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேசிய பாடசாலையாக தரமுயர்த்த கோரிக்கை

Princiya Dixci   / 2016 நவம்பர் 15 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையைத் தேசிய பாடசாலையாகத் தரம் உயர்த்த வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன், இன்று செவ்வாய்க்கிழமை (15) கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு, இன்று (15) அவர் அனுப்பி வைத்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகின் முதலாவது தமிழ் பேராசிரியரான முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் மற்றும் இலங்கை முன்னணி அரசியல்வாதிகளையும் உருவாக்கிய பாடசாலை உவெஸ்லி உயர் தரப் பாடசாலையாகும்.

இப் பாடசாலையில் சுமார் 02 ஆயிரம் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். 75க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

கல்முனை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள இப் பாடசாலையைத் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்துவதன் மூலம், தமிழ் உலகிக்கு அளப்பரிய செயலாற்றிய சுவாமி விபுலானந்தருக்குச் செய்யும் கைங்கரியம்.

இலங்கையில் ஒரு தேர்தல் தொகுதிக்கு ஒரு தேசியப் பாடசாலை ஏற்படுத்தப்பட்ட போது, கல்முனை தேர்தல் தொகுதியில் தேசிய பாடசாலைக்கான முழு நிறைவான தகமைகளைக் கொண்டிருந்த இப் பாடசாலை அன்று இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும்.

எனவே, தற்போதைய நல்லாட்சி அரசாங்கம், கல்முனை உவெஸ்லி உயர் தரப் பாடசாலையைத் தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்த வேண்டுமென, அம் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X