Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் இன்று (7) ஈடுபட்டனர்.
ஊழியர்களின் சம்பள முரண்பாடு, மாதாந்தக் கொடுப்பனவு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை நிறைவேற்றித் தருமாறு கோரியே மேற்படி பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் வை.முபாறக் தெரிவித்தார்.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் கல்விசாரா ஊழியர்கள் கடந்த ஜூலையில் மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கிய வாக்குறுதியை அடுத்து, இப்பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி 2017ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்ட நிதியில் 460 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி இவ்வருடத்தில்; ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தும், இதுவரையில் நிதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காமல் இழுத்தடிப்புச் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தராத பட்சத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் கூறினார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago