2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 08 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிமின் தலைமையில் இரு அமர்வுகளாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவின்போது, 935 பேர் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

கலை, கலாசாரப் பீடத்தைச் சேர்ந்த கலைமானி (விசேடம்) 47 பேரும் கலைமானி (பொது) 298 பேரும் பிரயோக பீடத்தைச் சேர்ந்த விஞ்ஞானமானி பட்டப்படிப்பு (விசேடம்) 33 பேரும் விஞ்ஞானமானி பட்டப்படிப்பு (பொது) 86 பேரும் வர்த்தக முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த வியாபார நிர்வாகத்துறை முதுமானியில் 10 பேருமாக 474 பேர்  முதலாவது அமர்வில் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழிப் பீடத்தைச் சேர்ந்த 211 பேரும் முகாமைத்துவ தகவல் தொழில்நுட்ப விஞ்ஞான மானியில் 250 பேருமாக  461 பேர் இரண்டாவது அமர்வில் பட்டங்களைப் பெறவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .