2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

திருக்கோவில் கல்வி வலயத்தில் 101 மாணவர்கள் சித்தி

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

வெளியிடப்பட்டுள்ள தரம் -05 புலமைப்பரிசில் பரீட்ப் பெறுபேறுகளுக்கமைய,  திருக்கோவில் கல்வி வலயத்தில் 101 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இதில் ஆலையடிவேம்பு கோட்டத்துக்குட்பட்ட விவோகானந்தா பாடசாலை மாணவி கமலேந்திரன் சிவர்;சிகா அதிகூடிய 180 புள்ளிகளைப் பெற்று வலய மட்டத்தில் முதலாமிடத்தையும் மாவட்ட மட்டத்தில் 11ஆவது இடத்தையும் பெற்றுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் 61 மாணவர்களும்  திருக்கோவில் கல்விக் கோட்டத்தில் 34 மாணவர்களும் பொத்துவில் கல்விக் கோட்டத்தில் 06 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

இதேவேளை, அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில்  15 மாணவர்கள் சித்தியடைந்து வலய மட்டத்தில் தொடர்ந்தும் முன்னிலை வகிப்பதாகவும் அவர்  கூறினார்;.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X