2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை, நாவிதன்வெளி  பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மத்திய நிலையம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) 2.30 மணிக்கு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஆகியோரின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரகாரம் கலைத்துறையை மேம்படுத்தும் நோக்கத்தை பூரணப்படுத்தும் முகமாக உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் இக்கலாசார நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலாசார மத்திய நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார்.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் நடைபெறவுள்ள இத்திறப்பு விழாவில், ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகே, பெற்றோலிய வள பிரதி அமைச்சர் அனோமா கமகே, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், சுகாதார பிரதி அமைச்சர் எம்.சீ.பைசால் காசீம், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கவீந்திரன் கோடீஸ்வரன், எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ரி.கலையரசன், எம்.இராஜேஸ்வரன்,  அம்பாறை மாவட்ட செயலாளர் துசித.பி.வணிகசிங்ஹ, மேலதிக மாவட்ட செயலாளர்களான கே.விமலநாதன், எம்.ஐ.அமீர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X