Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
சமுதாய அடிப்படை அமைப்புகளை விஸ்தரிப்பது தொடர்பாக, திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முழு நாள் பயிற்சிப் பட்டறை, நேற்று(20) கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி, கல்முனை, கல்முனை தமிழ் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த 93 உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன், இவர்களுக்கு கிராம மற்றும் பிரதேச மட்டத்தில் காணப்படும் சமுதாய அடிப்படை அமைப்புகளை புனரமைத்தல், விஸ்தரித்தல், மேற்பார்வை செய்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.
கல்முனை பிரதேச திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எ.ஆர்.எம். சாலிஹ்யின் ஒருங்கிணைப்பில், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், துறைசார் வளவாளர்களாக அம்பாறை மாவட்ட திவிநெகும நிகழ்சித்திட்ட முகாமையாளர் யு.எல்.எம்.சலீம், திவிநெகும மாவட்ட நிர்வாக முகாமையாளர் ஏ.எல்.நௌபீர், சம்மாந்துறை பிரதேச திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025