Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
பி.எம்.எம்.ஏ.காதர் / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
“ஊடகத்துறை என்பது எப்போது மனிதன் கருத்துகளையும், அவனுடைய எண்ணங்களையும் வெளிப்படுத்தத் தொடங்கினானோ அந்த ஆரம்பம் முதல் இன்று வரைக்கும், ஏதோ ஒரு வடிவங்களில் மக்களிடம் இந்த ஊடகத்துறை என்பது செல்வாக்குச் செலுத்தி வருவதை நாங்கள் காண்கின்றோம்” என, அக்கரைப்பற்றுப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட செயலக உளவளப்பிரிவின் அனுசரணையில் அக்கரைப்பற்று பிரதேச செயலகம் நேற்று (19) ஊடகவியலாளர்களுக்கு நடாத்திய “உளவளத்துணையும் ஊடகமும்” என்ற தொனிப் பொருளிலான செயலமர்வு, செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“பொதுவாக இந்த ஊடகங்களைப் பொறுத்தவரையில், ஆரம்ப காலங்களில் எழுத்து அல்லது அச்சுப்பதிவில் இருந்த ஊடகம் மாற்றமாகி தற்போது இலத்திரனியலும் அதைவிடப் பரந்தும், எல்லோருடைய சமூக வலைத்தளம் என்கின்ற அடிப்படையிலும் மிக இலகுபடுத்தப்பட்ட வகையில் வளர்ந்திருக்கின்றது.
“கருத்துகளை கருத்துகளால் வெல்வதற்கான தைரியமும் மனப்பாங்கும் வளர்ச்சியடைந்துள்ளது. ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் பணியென்பது, முக்கியமானதும் தேவையுடையதுமாகவும் இருந்து வருகின்றது.எல்லா நேரங்களிலும் எல்லோரும் எல்லாத் தகவல்களையும் சரியான வடிவங்களில் பெறுகின்றோமா என்பது சில வேளைகளில் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
“இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இன்று, ஊடகவியலைப் பொறுத்தவரையில், பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது அவை ஊடகங்களுக்கிடையில் இருக்கின் போட்டிகள் கருத்துகளை உடனடியாக வெளியிடவேண்டும் என்கின்ற அவசரம் அந்தக் கருத்துகள் மூலம் தாங்கள் நினைப்பவற்றை அடைந்து கொள்கின்ற ஊடகத்துறை சார்ந்தவர்களின் மனப்பாங்கு என்பன பிரச்சினைக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.
“இலங்கையைப் பொறுத்த வரையில், அரசமைப்பின் 14ஆவது உறுப்புரையில், தகவல்களை அறிந்து கொள்கின்ற விடயம் அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை மக்களுக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும் கருத்துகளை வெளிப்படுத்தகின்ற சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாக இருக்கின்றது.
“இதேவேளை, இந்த ஊடகத்துறையில் சில மட்டுப்படுத்தப்பட்ட விடயங்களும் இருக்கின்றன. அது உறுப்புரிமை 15-1இல் சொல்லப்படுகின்றது. இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான செய்திகளை வெளியிடுகின்ற போது, கட்டுப்பாடுகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. அதே வேளை சமைய, சமூக, சகவாழ்வு தடையாக இருக்கின்ற விடயங்களைப் பொறுத்தவரையிலும், நாடாளுமன்ற சிறப்புரிமைகள், நீதிமன்ற அவமதிப்புக்கள், மாபங்கப்படுத்துல் போன்ற விடயங்களுக்கும் அரசமைப்பில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
“அதேபோன்று, இன்னும் ஒரு விடயம் ஊடகவியலாளர்களுக்குத் துணையாகவும், அரசமைப்பு 14க்கு பலம் சேர்க்கின்ற விடயமாக இருப்பதுதான், தகவல் அறியும் சட்ட மூலமாகும். இந்த செயலமர்வின் நோக்கமாக இருப்பது என்வென்றால், இந்த ஊடகவியலில் எதிர்நோக்குகின்ற சுதந்திரமின்மை அல்லது அச்சுறுத்தல்கள், அதே நேரம், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், ஊடகவியலாளர்களால் பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஆகிய விடயங்களை கலந்துரையாடி, அதன் மூலமாக எவ்வாறான மேம்படுத்தலைச் செய்யலாம் என்பதை ஆராய்வதே நோக்கமாகும்” என்றார்.
இந்த செயலமர்வில் உளவளத்துணை மாவட்ட இணைப்பாளர் ஏ.ஏ.டீன் முகம்மட், உளவளத்துணை உத்தியோகத்தர்களான எம்.எஸ்.எம்.ஜறூன் சரீப்,எஸ்.ஆப்தீன் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
29 Apr 2025
29 Apr 2025