2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் கிராமத்தில் யானைகள் அட்டகாசம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 14 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் 2 வீடுகளையும் கடையும் ஒன்றையும் பயிர்களையும்  ஞாயிற்றுக்கிழமை (13) இரவு காட்டு யானைகள்; சேதப்படுத்தியுள்ளன.

இதன்போது வீட்டில்  உறங்கிக் கொண்டு இருந்தவர்கள் தெய்வாதினமாக உயிர் தப்பியதுடன் யானை வீட்டில் இருந்த சமையல் பொருட்கள், உபகரணங்கள், கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் பயிர்களை நாசப்படுத்தி உள்ளன.
இதனைத் தொடர்ந்து அயலவர்களில் உதவியுடன் யானைகளை விரட்டியடித்துள்ளனர்.

இதனையடுத்து இன்று (14) திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளதாகவும் அப்பகுதி கிராம சேவகர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோருக்கு அறியப்படுத்தப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சேத விபரங்களை பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .