2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகள் கண்டுபிடிப்பு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்புக் கிட்டங்கி, ஆற்றில் மீன்பிடிப்பதற்காகச் சட்டவிரோதமாகப் பாவிக்கப்பட்ட 05 இலட்சம் பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை, கடந்த வியாழக்கிழமை (20) கைப்பற்றப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் எம்.ஏ.நஸீர் தெரிவித்தார்.

சேனைக்குடியிருப்புக் கிட்டங்கி ஆறு, துரைவந்தியமேடு ஆறு ஆகிய பிரதேசங்களில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளின் மூலம் மீன்பிடிக்கப்படுவதாகக் கல்முனை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்துக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதலின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் எம்.ஏ.நஸீர் தலைமையில் ஏ.எம்.நஜாத், கே.விஜயராகவன் ஆகிய கடற்றொழில் பரிசோதகர்களும், கடற்படை வீரர்களும் இணைந்து இத்தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்திய மீனவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட வலைகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் எம்.ஏ.நஸீர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X