2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தடம்புரண்ட முச்சக்கரவண்டி மீது பஸ் மோதி விபத்து: ஒருவர் பலி; இருவர் காயம்

கனகராசா சரவணன்   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில், கள்ளியம்தீவு பகுதியில் முச்சக்கரவண்டி தடம்பிரண்ட போது எதிரே வந்த பஸ்ஸொன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதுடன், இருவர் படுகாயமடைந்ததுள்ளனரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்துத் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் 3  பிரிவு வாகீசா வீதியைச் செர்ந்த 39 வயதுடைய ஏ.யோகேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவராவார்.

சம்பவதினம் மாலை 4 மணியளவில், அக்கரைப்பற்றில் இருந்து திருக்கோவில், கள்ளியந்தீவு பிரதேசத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் மூவர் சென்றபோது, கள்ளியம் தீவு வீதி வளைவில் முச்சக்கரவண்டி வேகத்தைக் கட்டுப்படுத்தமுடியாமால்  வீதியில் தடம்புரண்டுள்ளது.

அப்போது, பொத்துவில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்ற தனியார் போக்குவரத்து பஸ்ஸொன்று எதிரே வந்து,  தடம்புரண்ட முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில்
முச்சக்கரவண்டியில் பிரயாணித்த 3 படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்தர்களை, அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலைக்கு எடுத்தச் சென்றபோது, ஒருவர் இடையில் உயிரிழந்துள்ளார்.

ஏனையவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .