2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவுகள் விநியோகம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, எம்.ஏ.றமீஸ், ரீகே.றஹ்மத்துல்லா, வி.சுகிர்தகுமார்

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு உலர் உணவுப் பொதி விநியோகிக்கப்பட்டு வருவதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம். அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் கொரோனா வைரஸ் காரணமாக நாளாந்த வருமானத்தை இழந்த சமுர்த்திப் பயணாளிகள், சமுர்த்தி பெறுவதற்கு காத்திருப்புப் பட்டியலில் உள்ளோர், நாளாந்த வருமானத்தை இழந்த கூலித் தொழிலாளர்கள் ஆகிய குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 05 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பிரதேச செயலாளர்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தனிமைப்படத்தப்பட்ட பிரதேசங்களான அக்கரைபற்று பிரதேச செயலாளர் பிரிவில் 7,224 குடும்பங்களுக்கும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 9,107 குடும்பங்களுக்கும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 6,056 குடும்பங்களுக்குமாக மொத்தம் 22,387 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X