Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
“தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தைச் சில தேரர்கள் குழப்ப முயற்ச்சிக்கின்றனர்” என, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
பாண்டிருப்பு, நாவலர் வித்தியாலயத்தின் அதிபர் பைந்தமிழ்க்குமரன் ஜெ.டேவிட் எழுதிய மண்மாதா கவிதை நூல் வெளியீட்டு விழா, கல்முனை ஆர்.கே.எம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்,
“தமிழ் சமூகம் இன்று நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போது நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசமைப்பு ஒன்றை முன்வைக்கின்ற நிலையில் அதனைத் தென்பகுதியில் இருக்கின்ற சில தேரர்கள் எதிர்க்கின்ற நிலை காணப்படுகின்றது.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கின்ற தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் பல இடர்பாடுகள் காணப்படுகின்றன. பெரும்பான்மை கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, முஸ்லிம் காங்கிரஸ், இன்னும் சில இதர கட்சிகளும் சேர்ந்து தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என எண்ணியிருந்தாலும் தென் பகுதியிலே இருக்கின்ற சில பெரும்பான்மையினரும் மகா சங்கத்தினரும் இதனை எதிர்ப்பது கவலையளிக்கின்றது.
“சில தேரர்கள், தமிழர்களுக்கு எதனையும் கொடுக்கக் கூடாது அவர்கள் சுயநிர்ணய உரிமையைப் பெறக்கூடாது என்பதற்காக தீர்வுத்திட்டத்தைக் குழப்புவது வேதனையைத் தருகின்றது.
“தமிழ் மக்கள் ஆயுதத்தால் சாதிக்க முடியாதவற்றை சமாதானத்தின் மூலமாகச் சாதித்துக் காட்ட வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எந்த நேரத்திலும் அமைதியாக இருந்து சமாதானத்தை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.
2 hours ago
6 hours ago
24 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
24 Sep 2025