2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

திடீர் சோதனையில் 18 பேர் கைது

கனகராசா சரவணன்   / 2017 செப்டெம்பர் 22 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற, பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய, மட்டக்களப்பு, அம்பாறை நகரப்பகுதிகளிலவ், நேற்று (21) இரவு நடத்தப்பட்ட திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையில், 18 பேரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக அம்பாறை, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். 

வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 5 மணிவரை, பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை, இடம்பெற்றது. 

இதன்போது, மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 7 பேரும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி இருந்து வந்த 4 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்  என்று, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். 

அம்பாறை நகரப்பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 4 பேரும் வடிசாரயத்துடன் ஒருவரும் மதுபோதையில் அமைதிக்கு பங்கம் விளைவித்த ஒருவரும் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, அம்பாறை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பங்களில் கைது செய்யப்பட்டோரை அந்தந்த மாவட்டங்களிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X